இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை?

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனைகளும் இதன் போது நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமிதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அத்துடன் சைபீரிய எல்லைக்கு அருகே ரஷ்யாவில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் இதன் போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த இரு நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க கூடாது.

சில போர் கருவிகள் தவிர (விமானம் போன்றவை) மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை போன்ற கருவிகளை வாங்க கூடாது. இதை மீறி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.

இதனால் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியா ரஷ்யாவுடன் இராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


#Narendra Modi #India #Russian Federation #United States of America

No comments

Powered by Blogger.