எமக்கு நாமே துணை

கொதிக்கின்ற நெஞ்சத்தை
தேற்றுவார் யார்?
குமுறி எழும் கண்ணீரை
போக்குவார் யார்?
துடிக்கின்ற எங்கள் நிலை
நீக்குவார் யார்?
வதைக்கின்ற முள் வேலி
அகற்றுவோர் யார்

கம்பிகளின் விடுதலையை
வேண்டுவோர் யார்
எழுந்திடு என்று முழக்கங்கள்
போடுவோர் யார்
வந்த பகை வாசலிலே
போக்குவோர் யார்
செந்தமிழை நிலை பெறவே
செய்குவோர் யார்

வந்த துயர் களைந்திடவே
துடிப்போரும் யார்
வரலாற்றை காக்க எண்ணி
வெடிப்போரும் யார்
பொங்குகனல்  விழியிரண்டில்
தாங்குவோர் யார்
வெந்தணலில் வேகிடவே
விம்முவோர் யார்

நிறை போதை விலை மாது
கூத்தாடி கொலை கொள்ளை
கொள்கை என நீ திரிந்தால்
தலை போகும் நிலை வந்து
விலை போகும் எம்மினமும்...

.........கவிப்புயல் சரண்.........

No comments

Powered by Blogger.