ஈழத்துச் சிறுமி பலரை நெகிழ வைத்த சாதனை!

 2018கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் காலை வெளியாகியிருந்தன.

நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்திருந்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி ஒருவரின் சாதனை அனைவரையும் அவர்பால் ஈர்க்கச் செய்துள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கு தாயகத் தமிழர்களை வதைத்து எடுத்த கோர யுத்தம் இந்த சிறுமியையும் விட்டுவைக்கவில்லை.

அந்த கொடூரங்களின் அடையாளமாக தனது கையை இழந்த நிலையிலும், அதில் மனம் தளராது இன்று அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

குறித்த மாணவியின் இந்த சாதனையை பலரும் வெகுவாகப் பாராட்டி வருவதுடன் அதிகமானவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

#Grade 5 Examination 2018 #Mullaitivu #tamilnews  #srilanka

No comments

Powered by Blogger.