ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்கள் மீது ராணுவத்தினர் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.

சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. ஆனால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

#JammuKashmir #ChemicalWeapons  #ஜம்மு காஷ்மீர் | #ரசாயன் #ஆயுத #தாக்குதல்

No comments

Powered by Blogger.