ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ரூ.100 கோடி வைப்புத்தொகை தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டது.

அந்த தொகை முறையாக செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த தொகையில் இருந்து இதுவரை வெறும் ரூ.7 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. எனவே, அந்த வைப்புத்தொகையை முறையாக செலவு செய்யாத தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 #Sterlite #SterliteCopper #SupremeCourt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.