நவகிரகங்களின் தோஷம் விலக செய்யும் பரிகாரங்கள்….!

சூரியனின் தோஷம் விலகுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயத்தின்போது, சூரியனுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட  வேண்டும்.
சந்திரனின் தோஷம் நீங்குவதற்கு பெளர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு வெள்ளைத்தாமரை பூவை சமர்ப்பித்து, வெண்பொங்கலை படையலாக வைத்து  வழிபட வேண்டும்.
செவ்வாய் பகவானின் தோஷம் நீங்குவதற்கு செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் சிகப்பு நிற  ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.
புதன் பகவானின் தோஷம் நீங்குவதற்கு புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று பெருமாளுக்கு பச்சைப்பயிரால் செய்யப்பட்ட உணவை படைத்து வழிபட வேண்டும்.
குரு பகவானின் தோஷம் நீங்க வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வழிப்பட வேண்டும்.
சுக்கிரன் பகவானின் தோஷம் விலக வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு பதார்த்தங்களை படைத்து சுக்கிர பகவானை வழிபட வேண்டும்.
சனிபகவானின் தோஷம் நீங்க உடல் ஊனமுற்றவர்கள், ஏழைகள், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் ஆகியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். ஒரு சனிக்கிழமையன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் சென்று சனீஸ்வரரை வழிபட சனி தோஷம் நீங்கும்.
ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆவார்கள். சர்ப்பத்தின் சாரம் கொண்டவர்கள், முதியவர்கள் மற்றும் துறவிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த கிரகங்களின்  தோஷம் குறையும். மேலும் செவ்வாய் அல்லது சனிக்கிழமையன்று ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு சென்று ராகு-கேது பூஜை செய்து வழிபட ராகு மற்றும் கேது கிரகங்களின் தோஷம் குறையும்.
Powered by Blogger.