வீதியிலே பல உயிர்கள் பசியிலே..!

அங்கம் இழந்த யாரோ
யாசகம் கேட்டு வந்தால்
சிறு யாசகம் கொடுத்து
நீயும் உதவிட நினையாதே

எழுந்திட முடியாமல் யாரோ
வீதியிலே வீழ்ந்து கிடந்தால்
கரம் கொடுத்து நீயும்
தூக்கி விட நினையாதே

வாகனப் பயணத்திலே யாரோ
நோயாளி ஒருவர் நின்றால்
அமர்ந்திட ஒரு இருக்கை
கொடுத்திட நினையாதே

வீதியிலே பல உயிர்கள்
பசியிலே தவித்தாலும்
வீணாகும் உணவில் சிறிதும்
பகிர்ந்து அளிக்க நினையாதே

அநீதி பல உன் முன்னே
அடுக்கடுக்காக நிகழ்ந்தாலும்
ஆக்ரோசம் கொண்டு நீயும்
அநீதி கலைத்திட நினையாதே

நான் நினையாதே என்ற எல்லாம்
மறந்தும் நீ மீண்டும்
நினைத்திட நினையாதே

ஆமாம். ..........
நீ நினைத்தால்
மனிதம் அழியாதே....!
..............
கம்பர்மலை. ரேகா
Powered by Blogger.