மானிட உருத்திராட்சப் பூனைகளால் ...!

அகத்தைப் போல் 
புறத்திலும் வெளிப்படை 
உணர்ச்சிகளின் உச்சியில் 
உடல் உடையற்று போகிறது 
உணர்வுகளின் உச்சத்தில்
உள்ளம் திறந்தே கிடக்கிறது 
அன்பின் திறந்த நிலை 
ஆசையின் ஒளிவு மறைவற்ற தன்மை 
அகத்திலும் புறத்திலும் 
நிர்க்களங்கமாக தெரிகின்றது 
களங்கமற்ற  நிலவிலும் 
களங்கத்தை காணும் மானிடர்கள் 
காட்சிப் பிழையாக 
கருதும் ஓவியம் இது ......

நிறக்  கலவைகளால் 
ஒரு போதும் 
களங்கமற்ற  நிர்வாணத்தை
வடித்து விட முடியாது 
மானிட உருத்திராட்சப் பூனைகளால்
நிர்வாணமற்றதும் 
நிர்வாணமற்ற தன்மையும் 
நிர்வாணமாகவே பார்க்கப்படும் 
காலவெளியின் யுக பரிமாணம் 
இதுவே ........................
-------------------------கலா புவன் --------------
Powered by Blogger.