ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த பிரபல நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து இருவருக்கும் சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார்.

இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்கிறார். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.


 #Petta #Rajinikanth #Sasikumar #Karthik Subburaj #Vijay Sethupathi #Bobby Simha #Simran #Nawasuddin Siddique #Anirudh #Megha Aakash #Trisha #Sasikumar #ரஜினிகாந்த் #கார்த்திக் சுப்புராஜ் #விஜய் சேதுபதி #சிம்ரன் #பாபி சிம்ஹா #மேகா ஆகாஷ்  #நவாசுதீன் சித்திக் #அனிருத் #திரிஷா #பேட்ட #சசிகுமார்

No comments

Powered by Blogger.