அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.
அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம்
படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 #Viswasam #AjithKumar   #Ajith Kumar #Siva  #Vivekh #Nayanthara #Yogi Babu #D Imman #விஸ்வாசம் #அஜித் #சிவா #நயன்தாரா #டி.இமான் #யோகி பாபு #விவேக்

No comments

Powered by Blogger.