கல்விக்கூடங்களும், பாலியல் அத்துமீறல்களும்!

பாடசாலை/ பல்கலைக்கழகம் என்பது கல்விக்காக உருவாக்கப்பட்ட கலைக்கூடம் இங்கே கல்வி மட்டுமா கற்பிக்கப்படுகின்றது என்பதுதான் தற்காலத்திலே எழும் பெரும் சந்தேகம். ஏனெனில் பத்திரிகை முதல்
இணையம் வரை சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி பாலியல் வன்கொடுமை பற்றியதாகவே காணப்படுகிறது.இப்பாலியல் அத்துமீறல் நோய் சில பல்கலை விரிவுரையாளர்களையும் சில பாடசாலை ஆசிரியர்களையும் பிடித்து உலுக்கிக்கொண்டிருப்பதுதான் கசப்பான செய்தி

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய் தந்தையிற்கு பிறகு கற்பிக்கும் குருவை வரையறுத்து சொல்கிறார்கள் அதன் பிறகே தெய்வத்தையே சொல்கிறார்கள் அத்தகைய குருவே பள்ளிக்கு செல்லும் பிஞ்சுகளின் மனதிலே கல்விக்கு பதிலாக காமத்தை விதைத்து தனி வகுப்பு என்று சொல்லி தனி வழி கூட்டிச்சென்று பலாத்காரம் செய்வதுதான் தற்கால குரு தர்மமா.....?

இப்படியான ஒரு சில தரம் கெட்ட ஆசான்கள் செய்யும் இந்த தரம் கெட்ட செயற்பாடுகள் காரணமாக அனைத்து ஆசிரியர்களையும் சந்தேகமாக நோக்க வேண்டிய காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இன்றைய கல்விச் சமுதாயம். அத்தோடு இந்த வன்கொடுமைகள் பாடசாலைகளிலாவது ஏதோ சில செய்திகள்தான் நாம் அறிந்திருக்கிறோம்

ஆனால் சில பல்கலைக்கழகம்......?
அது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..!

அதுதான் புரியாதபுதிர்.

அங்கே கல்வி கற்க செல்லும் ஒவ்வொரு பல்கலை மாணவனும் ஏதோவொரு
இன, மத ,மொழி பேதம் கடந்து பெற்றோரை பிரிந்து அறிமுகமற்ற புதியதொரு சூழலிலே பல்கலைக்கழக கல்வியை எதிர்நோக்கி செல்லும்போது அந்த பல்கலைக்கழக கற்பித்தலுடன் தொடர்பு பட்ட ஒரு சில விரிவுரையாளர்களின் பாலியல் அத்துமீறல் செயற்பாட்டினால் பல்கலைக்கழகம் என்றாலே வன்கொடுமைக்கழகம் என்று வந்த வழியே திரும்பி ஓடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதிலே ஆரம்பிக்கிறது பல்கலைக்கழகத்தின் கல்விச் சீர்கேடு

மேலும் ஏதோவொரு காரணம் சொல்லி மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை பெறுவதும் அதனூடாக ஒரு சிலரை குறிவைத்து ஆபாசப்பேச்சுக்கள் தொடங்குவதும் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இணங்க வேண்டி கட்டாயப்படுத்துவதும் இல்லையென்றால் பரீட்சைகளிலே தாக்கி புள்ளிகளிலே குறைத்து அவர்களை மிரட்டி கல்வியை இடைநிறுத்துவதும்தான் கல்வி கற்றவர்கள் செய்யவேண்டிய வேலையா..? இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் எத்தனை தற்கொலை வரை சென்றவர்கள் எத்தனை....? அதையெல்லாம் மறைத்து தண்டனைகளையும் தவிர்த்து மாணவர்களை மீண்டும் பாதிக்கக்கூடிய
இத்தகைய உட்பூசல் வேலைகளை பல்கலைக்கழகம் தவிர வேறெங்கிலும் அதிகம் காணமுடியாது

அதுவும் இத்தகைய தவறுகளை செய்யும் அதிமேதாவிகள் சிலர் பொறுப்பான பதவியிலே அமர்ந்தவர்கள் அவர்களை பகைத்துக்கொண்டு மாணவர்கள் கல்வி கற்க முடியுமா....?

இல்லையே......!
அதற்காகவே அவர்களுடைய தவறுகளுக்கு உதவிசெய்யும் ஒரு சில தரம் கெட்ட மாணவ/ மாணவியரும் இத்தகைய பல்கலைக்கழகங்களிலேதான் காணப்படுகிறார்கள்
அதனாலேதான் இந்த ஒரு சில தவறான விரிவுரையாளர்கள்,மாணவர்களால் அனைத்து பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியதுமான தவறான ஒரு பார்வை சமுதாயத்தில் உருவாகியிருக்கிறது.

லஞ்சவாதிகளே...!
ஆமா.......
கல்விக்கு விலை கொடுக்க
கற்பு என்ன அங்காடியிலே விற்கும் பொருளா........?

அல்லது

கற்பினை விட கல்வி பெரிதா...?

பாலியல் லஞ்சம் கேட்கும் போது சம்மந்தப்பட்ட மாணவிகளின் கல்வி எதிர்காலத்தையும் கல்வி கற்பித்து அனுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்களை நம்பி பிள்ளைகளை படிக்க அனுப்பிவிட்டு என் மகன் / மகள் பட்டதாரியாகி வருவாள் என்று வீட்டிலே காத்திருக்கும் பெற்றோர்களின் கனவுகளை நினைத்துள்ளீர்களா.....?
இல்லையே....

குரங்கு கையிலே பூமாலை கொடுத்த மாதிரித்தான் சிலருக்கு கொடுத்த பதவிகள்...

அதை முற்றிலுமாக நீக்கியெறிந்தால்தான் இனிவரும் காலங்களிலாவது மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்பார்கள்

இதற்கு தீர்வுதான் எப்போது.....?


கம்பர்மலை. ரேகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.