அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய மாபெரும் நடை பயணத்திற்கு த.தே.ம.முண்ணனி இணைந்து பூரண ஆதரவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய மாபெரும் நடை பயணத்திற்கு  பூரண ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் யாழ்.மாநகரசபையின் உறுப்பினர்களான வைத்திலிங்கம் கிருபாகரன், விஜயகுமார் ராஜீவ் காந்த், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள், கட்சியின் இளைஞரணிப் பொறுப்பாளர் கனகசபை விஸ்ணுகாந் உள்ளிட்டவர்களும் பேரணியிவ் கலந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும்  வகையிலும், அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்  இந்த நடைபயணம்  நடாத்தப்படுகிறது.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய் ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த நடைபயணத்தில்   நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நடைபயணத்தில் மேலும் பல மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 

நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணமாகி கிளிநொச்சி வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடையவுள்ளதாக தெரியவந்துள்ளது.


#jaffna #tamilnews #anurathapure  #jaffna_university #tamilnews  #விடுதலை  #கிளிநொச்சி #வவுனியா  #அனுராதபுரம்  #தமிழ் தேசிய மக்கள் முன்னணி  #பல்கலைக்கழக மாணவர்கள்    #செல்வராஜா கஜேந்திரன்  # வைத்திலிங்கம் கிருபாகரன், #விஜயகுமார் ராஜீவ் காந்த்   #கனகசபை விஸ்ணுகாந் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.