வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) வவுனியாவில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பன்டாரவன்னியனின் சிலைக்கருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சத்தியாக்கிரக போராட்டமானது காலை 9 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சத்தியாக்கிரக போராட்டமானது அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தியே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப்பேச்சாளர் துளசி, தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.