திருநெல்வேலியில் கிணற்றுக்குள் பாய்ந்து வாள்வெட்டுக் குழுவிடமிருந்து தப்பித்த இளைஞன்!

வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இளைஞனொருவன் கிணற்றுக்குள் பாய்ந்த சம்பவம் யாழ். திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் நின்றிருந்த இளைஞரை 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேரை கொண்ட வாள்வெட்டுக்குழுவினர் துரத்தி சென்றுள்ளனர்.

இதன்போது வாள்வெட்டு குழுவினரிடமிருந்து தப்பிப்பதற்காக குறித்த இளைஞன் ஓடிச்சென்று அருகிலிருந்த கிணற்றுக்குள் பாய்ந்துள்ளார்.

அதன்போது, இளைஞனை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்போது, அப்பகுதியூடாக பொலிஸார் வருவதை அவதானித்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். எவ்வாறாயினும், தப்பியோடியவர்களில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கிணற்றுக்குள் பாய்ந்த இளைஞனும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிக் இருவர் கைதடியை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கொக்குவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#Thirunelvely,    #Kalviyankadu,   #Sri Lanka    #jaffna  #Aava

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.