ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: தொலைபேசி நிறுவனத்திடம் தரவைப் பெற நீதிமன்றம் அனுமதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் ஹவாய் சீன தொலைபேசி நிறுவனத்தின் உதவியை நடவேண்டும் என்ற சி.ஐ.டியினர் கோரிக்கைக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் தொலைபேசியில் அளிக்கப்பட்ட தரவுகளை மீள பெற்றுக்கொளவதற்காகவே குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டத்தை வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவருமான நாமல் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபருடனான தனது தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் பதிவொன்று இருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாமல் குமார தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் பிரதி பொலிஸ்மா அதிபரின் உரையாடல் காணப்படுவதாகவும், ஆனால் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக எந்ததொரு உரையாடலும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குரல் பதிவில் சில விடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளமையால், நாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்ள சீன தொலைபேசி தயாரிப்பாளர் ஹவாய் நிறுவனத்தின் உதவியை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு கோரியிருந்தது.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.