விக்னேஸ்வரனின் கருத்துக்குப் பதிலளிக்க முடியாது- இரா.சம்பந்தன்!

ஒவ்­வொரு நாளைக்கு ஒவ்­வொரு கருத்தை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்து வரு­கின்­றார். அவ­ரின் கருத்­துக்­குப்பதி­ல­ளிக்க முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் .

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கடந்த வியா­ழக்­கி­ழமை, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனா என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘வடக்கு முத­ல­மைச்­சர் ஒவ்­வொரு நாளும ஒவ்­வொன்­றைக் கூறி வரு­கின்­றார். நீங்­கள் கேட்­கும் அவ­ரின் கருத்­துக்­குப் பதில் சொல்­லிக் கொண்­டி­ருக்க முடி­யாது’ என்­றார் சம்­பந்­தன். 

No comments

Powered by Blogger.