விம­லின் புதிய கண்­டு­பி­டிப்பு என்ன தெரியுமா??

புலம்­பெ­யர் தமிழ்த் தலை­மை­கள் இந்த நாட்­டில் சிங் கள – – முஸ்­லிம் கல­வ­ரங் களை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­க­வும், அதற்­காக சிங்­க­ளக் குழுக்­க­ளுக்கு பணம் வழங்­கு­வ­தா­க­வும் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

முஸ்­லிம்­கள் வடக்கு, கிழக்கு இணைப்­ப­தனை விரும்­பு­வ­தில்லை. சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக்­கும் இடை­யில் மோதலை ஏற்­ப­டுத்­தி­னால், முஸ்­லிம்­கள் இல­கு­வா­கவே தமிழ் மக்­க­ளு­டன் இணைந்து கொள்­ள­வார்­கள்.

முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­க­ளில் ஒரு­வரை திட்­ட­மிட்டு கொலை செய்­தால், சிங்­க­ள­வர்­கள் மீது வெறுப்­புக் கொண்டு தமி­ழர்­க­ளு­டன் முஸ்­லிம்­கள் இணைய வழி ஏற்­ப­டு­கின்­றது.

இத­னால், வடக்கு கிழக்கு இணைப்பை இல­கு­வாக முன்­னெ­டுக்­க­லாம் என்று புலம்­பெ­யர் தமிழ் அமைப்­புக்­கள் கனவு காண்­கின்­றன. இதற்­காக பணத்தை அந்த அமைப்­புக்­கள் அதி­கம் செலவு செய்து வரு­கின்­றன – என்­றார்.

மகிந்த, மைத்­திரி, கோத்தா கொலைச் சதியை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார, கிழக்கு மாகா­ணத்­தில் கல­வ­ரம் ஏற்­ப­டுத்த தனக்கு பிரான்­சி­லி­ருந்து பணம் வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

No comments

Powered by Blogger.