யாழில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினமும் அகிம்சை தினமும் கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு அகில இலங்கை காந்தி சேவா சங்கம், இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவலத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த காந்தி ஜெயந்தி தினமானது மகாத்மா காந்தியின் 149 வது பிறந்த தினமாகும்.

இதன்போது, யாழ்.வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலசந்திரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உட்பட அகில இலங்கை காந்தி சேவா சங்க உறுப்பினர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

மேலும், மகாத்மா கந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் பாடசாலை மாணவர்களினால் இசைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.