வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு!

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 30க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் முறைப்பாடுகளை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், நேற்று மாலை 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குருமன்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதி, மாடசாமி கோவிலடி, யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் பாடசாலை இளைஞர்கள் மற்றும் வீதியில் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், தலைக்கவசம் அணிவதில்லை, ஓர் மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தல், அதிவேகமாக செல்வது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் 30க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12ஆம் திகதி வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.