திரிஷாவின் திடீர் முடிவு - அதிர்ச்சியில் மற்ற நாயகிகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் வைத்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, திரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் திரிஷா, தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ள திரிஷா, முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட விருப்பம் தெரிவித்துள்ளாராம். திரிஷாவின் சம்பள குறைப்பு முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு, பேட்ட உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.