தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அலுவலகம் இடமாற்றம் k


யாழ். தென்மராட்சி மீசாலையில் இயங்கிவந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை(07-10-2018) முதல் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்றப்பட்ட அலுவலகத்தின் திறப்பு விழா சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.


இதேவேளை, குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments

Powered by Blogger.