கொழும்பு துறைமுகத்தில் நாசகாரி போர் கப்பல்!

ஜப்பான் தன்னியக்க பாதுகாப்பு கடல் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. காகா மற்றும் இனசுமா ஆகிய இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த இரண்டு கப்பல்களும் கடற்படையினரால் சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்பட்டன. காகா கப்பலானது 248 மீற்றர் நீளத்தை கொண்டமைந்துள்ளதுடன் 19 ஆயிரத்து 950 டொன் எடையையும் கொண்டுள்ளது.

இந்த கப்பலில் 400 பணியாளர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனசுமா கப்பலானது 151 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதுடன் 4 ஆயிரத்து 550 டொன் எடையை கொண்டமைந்துள்ளது.


இந்த கப்பலில் 170 பணியாளர்கள் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைத் தந்துள்ள இந்த கப்பல் நாட்டில் நங்கூரமிட்டிருக்கும் காலப் பகுதியில் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கப்பலில் வருகைத் தந்த பணியாளர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.

இதேவேளை, உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 4ஆம் திகதி இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#colombo  #japan   #tamilnews #srilanka

No comments

Powered by Blogger.