இளம்பெண்ணை அடித்தே கொன்ற கும்பல்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 15 வயது இளம்பெண்ணை 3 இளைஞர் சேர்ந்து அடித்து கொன்று மரத்தில் கட்டித்தூக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பாடசாலை மாணவியான சுவிதா யாதவ் தனது குடியிருப்புக்கு பாடசாலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது 3 இளைஞர்கள் சேர்ந்த கும்பல் ஒன்று மாணவி சுவிதாவை வழிமறித்து பலாத்காரத்திற்கு முயன்றுள்ளது.

இதில் குறித்த மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் மாணவியை தாக்கியுள்ளனர். இதில் மாணவி சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

மாணவி மரணமடைந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மரத்தில் அந்த இளைஞர்கள் மூவரும் சடலத்தை கட்டித்தூக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் குறித்த மாணவியின் சகோதரர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விரைந்துள்ளனர்.

பின்னர் கிராம மக்களின் உதவியுடன் தொடர்புடைய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவ சோதனையில் மாணவி சுவிதா பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.