ரஜினி பட நடிகையுடன் ஜோடி சேரும் சித்தார்த்

காலா படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாகி விட்டார் ஹூமா குரேசி. பாலிவுட்டை சேர்ந்த இயக்குனரான தீபா மேத்தா வித்தியாசமான கதைகளை படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர்.

இவர் அடுத்ததாக புதிய இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடரில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் ஏற்கெனவே தீபா மேத்தா இயக்கிய ’மிட் நைட்ஸ் சில்ரன்’ படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளைத் தவிர்த்து இணையதளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இந்நிலையில் தீபா மேத்தா இயக்கும் புதிய தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஹூமா குரேசியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் கம்மார சம்பவம் படத்தில் நடித்த சித்தார்த் தற்போது இயக்குநர் சசி இயக்கும் புதிய படம், கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கும் சைத்தான் கே பச்சா, சாய் சேகர் இயக்கும் படம் ஆகிய மூன்று படங்களில் நடித்துவருகிறார்.

No comments

Powered by Blogger.