ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணத்தின் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு ஆவா குழுவினர் வந்துள்ளதாகவும், இதனையடுத்து அங்கு நின்றிருந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளதுடன், இதனையடுத்து வாள்கள் கொண்டு அங்கு நின்றிருந்தவர்களை ஆவா குழு உறுப்பினர்கள் துரத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அவதானித்த வாள்வெட்டு குழுவினர் கிணற்றுக்குள் மறைந்து இருப்பவர் மீது கிணற்றுக்குள் வைத்தே கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெறும்போது அவ்வீதியூடாக பயணித்த கோப்பாய் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றியதுடன் தாக்குதல் நடத்திய இளைஞர்களில் மூவரை கைது செய்தனர்.

ஆனாலும் அங்கு தாக்குதல் நடத்திய ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.