முல்லைத்தீவில் வடக்குமாகாண பண்பாட்டுப் பெருவிழாவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் வடமாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று, இன்று என இரு தினங்களாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரம விருந்தினராக வடமாகண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளதுடன் 20 மூத்த கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

மேலும் சிறந்த நூற் பரிசு மற்றும் இளைஞர் விருதுகள் என்பன தெரிவுசெய்யப்பட்ட ஏனைய கலைஞர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிதிகளோடு கலை ஆர்வலர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் நலன் விரும்பிகளென பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.