நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

`சிம்டாங்காரன்' என்ற பாடலும், ‘ஒருவிரல் புரட்சி’ என்ற பாடலும் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ள ஒருவிரல் புரட்சி பாடல் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளார்.

இந்நிலையில், சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய், முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்.

மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும்.

மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.