பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 05ம் திகதி

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக நேற்று(09) நள்ளிரவு முதல் இலங்கை

பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும் அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும்.

அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  

No comments

Powered by Blogger.