ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தை வினவுமாறு பெப்ரல் கோரிக்கை

ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் இரு கருத்துக்கள் நாட்டில் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அவசியம் நீதிமன்றத்திடம் விளக்கம் கோர வேண்டும் எனவும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி அதிரடியாக பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியல் யாப்புக்கு முரணானது அல்லவெனவும்,  புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

தேர்தலை நடாத்த முன்னர் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.