ரவிராஜின் நினைவுத் தூபி முன்பாக நினைவு நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டது.


சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜின் நினைவுத் தூபி முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இன்று காலை நினைவு நிகழ்வுகள் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராசா, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், மற்றும் உள்ளூராட்சி மற்ற தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


#Tamilnews  #Tamil #Jaffna #TNA  #Srilanka #Colombo  #Tamilarul.net #நடராசா ரவிராஜின் #கே.சயந்தன்  #மாவை. சேனாதிராசா #இமானுவேல் ஆர்னோல்ட் 

No comments

Powered by Blogger.