சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிய ஒரே ஒரு நாற்காலி!

கடந்த இரு தினங்களாக வெற்றிடமாக உள்ள நாற்காலி ஒன்று அரசியலில் முக்கிய கதையாக பேசப்படுகிறது.


இது நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்திய பின்னர் காலமான சோபித்த தேரரின் ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியே வெற்றிடமாக உள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முதல்நாள் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மைத்திரிபாலவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அதில் சமூகமளிக்கவில்லை.

ஏற்கனவே கடந்த வருடம் அவர் இந்த நிகழ்வு அழைக்கப்படாமை முக்கிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Maithripala Sirisena
Powered by Blogger.