வவுனியா புகையிரதத்திலிருந்து வீழ்ந்த வைத்தியர் காயம்

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்த வைத்தியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தியவுடன் முல்லைத்தீவை சேர்ந்த வைத்தியர் ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.
எனினும் புகையிரத நிலையத்தின் தளம் குறித்த பகுதி வரைக்கும் நீளமின்மையால் அவர் திடீரென பள்ளமான பகுதியில் வீழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக காயமடைந்த நிலையில் குறித்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பொலிஸார் இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

No comments

Powered by Blogger.