பொதுத்தேர்தல் குறித்து ஆராய நாளை கூடுகின்றது விக்கியின் புதிய கட்சி

பொதுத்தேர்தல் குறித்து நாளைய தினம்(திங்கட்கிழமை) கூடி

ஆராயப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவரான வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற தமது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலிலேயே நாளைய தினம் கூடி ஆராயவுள்ளதாக சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.