கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள்

கடந்த ஆண்டு மாவீரர்

நாளுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இம்முறை முன்னதாகவே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு துயிலுமில்ல சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் மாவீரர் நாளை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த சிரமதானப் பணியில் மாவீரர்களது பெற்றோர், உறவுகள், மக்கள் , மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினர் அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.