ராதிகா ஆப்தே தென்னிந்திய இயக்குநர் மீது பாலியல் புகார்!

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்


அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார். தமிழில் டோனி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்தார், வெற்றிச் செல்வன் படத்தில் அஜ்மலுடன் நடித்தார். ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தியுடன் நடித்தார். இவர்களில் யாரை அவர் சொன்னார் என்று தெரியவில்லை. புகாருக்கு பிறகுதான் கபாலி படத்தில் நடித்தார்.இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து நோ ஃபில்டர் நேஹா - சீசன் 3 ( No Filter Neha - Season 3) என்ற நிகழ்ச்சியில் கூறும் போது, “தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது பெயர் சரியாக நினைவில்லை. அப்போது தான் நான் லண்டனிலிருந்து திரும்பி வந்திருந்தேன். அந்நேரத்தில் அந்த இயக்குநர் நடிகர் விக்ரம்மை வைத்து பீரியட் படம் இயக்கவுள்ளதாகவும், இதில் நீங்கள் நடித்தால் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்று என்னை ஆடிஷனில் பங்கேற்கும்படி அழைத்தார்.

இயக்குநரின் அழைப்பை ஏற்று ஓட்டலுக்கு சென்றேன். அது மிகவும் அழுக்கடைந்த ஓட்டலாக இருந்தது. ஒரு அறையில் 12 பேருடன் இயக்குநர் அமர்ந்திருந்தார். உள்ளே சென்ற என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார். பின் ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. என்றாலும், விரைவில் ஆடிஷன் முடிந்துவிடும் என்று நினைத்து காத்திருந்தேன்.

பிறகு அந்த இயக்குநர் என்னை நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார். அவர் தன் படத்துக்காகத்தான் ஆடிஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டால் போதும் என்று முடிவு செய்து, எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.