விஜய்யைப் சர்காரையொட்டி பிடிக்குமா?: கருணாகரன் பதில்!

சர்காரையொட்டி கருத்து கூறி, தன் மீது சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் குறித்து மீண்டும் கருத்து கூறியுள்ளார் நடிகர் கருணாகரன்.
விஜய் ரசிகர்கள் எனும் பெயரில் இயங்கிய சிலருக்கும் காமெடி நடிகர்

கருணாகரனுக்கும் இடையே நடந்த வார்த்தை மோதல்தான் சில வாரங்களுக்கு முன்பு டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. சர்கார் ஆடியோ விழாவில் விஜய் பேசியதைவைத்து ட்விட்டரில் விமர்சனம் செய்தார் கருணாகரன். இதனால் எதிர்த்தரப்பு கருணாகரனை வசைபாட பதிலுக்கு கருணாகரன் வசைபாட என இப்படியாகப் போயிக்கொண்டிருந்த வார்த்தைப் போர் உச்சகட்டத்திற்குச் சென்று கருணாகரனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.
தற்போது சர்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுக தரப்பு படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பக்கம் போராட, படத்தில் இலவச பொருட்கள் எரிக்கப்படும் காட்சிகளைப் பார்த்துவிட்டு சிலர் தங்கள் வீடுகளிலுள்ள இலவச பொருட்களை எரித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ட்விட்டருக்கு வந்த கருணாகரன் நேற்று (நவம்பர் 10) தனது ஃபாலோயர்களின் சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதில் கூறினார். அப்போது விஜய் தொடர்பான சில கேள்விகளும் கேட்கப்பட அதற்கும் பதில் அளித்தார். அப்போது, விஜய் ரசிகர்கள் பற்றி உங்களின் கருத்து என்ன எனக் கேட்டதற்கு “யாரையும் பொதுமைப்படுத்திக் கூற முடியாது” என்ற கருணாகரன், விஜய்யைப் பிடிக்குமா எனக் கேட்டபோது, “விஜய்யை ரொம்பவே பிடிக்கும்” எனவும் கூறினார்.
தங்களின் கால்ஷீட் கேட்டு விஜய் படத்திலிருந்தும் நயன்தாரா படத்திலிருந்தும் ஒரே நேரத்தில் உங்களை அணுகினால் யாருக்கு சம்மதம் தெரிவிப்பீர்கள் எனும் கேள்விக்கு “விஜய் படத்திற்கு” எனப் பதிலளித்தார். மிக்ஸி, லேப்டாப் எதுவும் உடைத்தீர்களா எனக் கேட்டதற்கு, “இல்லை, ஒருவேளை உடைத்தால் நான்தான் அதை வாங்கவேண்டும் என எனக்குத் தெரியும்” எனவும் கூறினார் கருணாகரன்.
லேட்டஸ்ட்டாக கருணகரனின் எந்தப் படமும் வெளிவராத நிலையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.