பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான தீர்ப்பு நாளை!

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம் தெரிவித்தார்.


தமக்கு சாதகமான நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்குமென தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று வெவ்வேறு தரப்பினர் தமது வாதங்களை முன்வைத்ததாகவும் ஏனைய தரப்பினரின் வாதங்கள் நிறைவைடந்ததன் பின்னர் இன்றைய அமர்வு நிறைவடையும் எனவும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் மேலும் தெரிவித்தார்.
#Tamilnews #Kabeir-Haseem #Parliment #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #ஐக்கிய தேசிய கட்சி #பாராளுமன்ற #கலைப்பு #கபீர் ஹஷீம்
Powered by Blogger.