பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்!

கடும் எதிர்ப்புக்கு பின், ஐரோப்பிய யூனியன் தலைமையுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மேபேசி கொண்டு வந்தவரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவதற்கான பிரெக்சிட் பொதுவாக்கெடுப்பை, கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்பில், யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றுநூலில் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் தனது பதவியைராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, புதிய பிரதமராக வந்த தெரசா மேஐரோப்பிய யூனியனுடன், பிரெக்சிட்பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பிரிட்டனுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என பிரெக்சிட்ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் ஆரம்பத்தில் இருந்தே பிரெக்சிட்டுக்குஇருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த தெரசா மே, சரியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவரது அமைச்சரவையில் உள்ள சிலரே விமர்சித்து வந்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரிட்டன் வெளியேறுவதற்கான பல்வேறு விதிமுறைகளும் ,கட்டுப்பாடுகளும், பேசி முடிக்கப்பட்டு வரைவு ஒப்பந்தம் உருவானது.

இந்த ஒப்பந்தத்தினால் பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்படும், என பிரெக்சிட்ஆதரவு எம்.பி.க்கள்அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது மிக கடினம் என நிபுணர்கள் எச்சரித்து வந்தநிலையில், அமைச்சரவையை கூட்டினார்பிரிட்டன் மே. 5 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைசந்திப்பின் முடிவில், பல எதிர்ப்புகள் இருந்தாலும் பிரெக்சிட்வரைவுக்குஒப்புதல் கிடைத்தது. 9 அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்திற்குஎதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
Powered by Blogger.