பழ.நெடுமாறன் புத்தகங்களை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

தனி ஈழம் குறித்தும் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கொண்டும் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகம் ஒன்றை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பழ நெடுமாறன் எழுதிய 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த அனைத்து புத்தகங்களும் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது

இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து அவர் கடந்த 2006ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் ஒப்படைக்கப்படவில்லை

இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திருப்பி தரவேண்டும் என்று கோரி மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் பழ நெடுமாறன் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சட்டவிதிமுறைகளின்படி பழ நெடுமாறனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை அழித்துவிடுமாறு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.