ஜோதிகாவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வித்யா பாலன்

ஜோதிகா நடிப்பில் நாளை ரிலீசாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கி உள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.


இந்தியில் வெளியான ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். இந்த நிலையில், படத்தையும், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் வித்யா பாலன் கூறியதாவது, “எனக்கு ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  
Powered by Blogger.