பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி

‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார். பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும், இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.

No comments

Powered by Blogger.