அரசை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி - அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நேற்று தமிழகத்தை நெருங்கிய நிலையில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு சுமார் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கஜா புயலுக்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று பாராட்டினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். பி. உதயக்குமார், “அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கும்  ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி. ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது” என்று கூறினார். 
Powered by Blogger.