கஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு

வெளியிணைப்பு இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வலைகள், பிளாஸ்ரிக் படகுகள் என மீன்பிடி உபகரணங்கள் பல கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கடலுடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் கச்சாய் கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

ஒன்பது இலட்சத்துக்கு மேற்பட்ட தொழில் உபகரணங்கள் அழிவடைந்தும் கடலால் காவு கொள்ளப்பட்டதென கச்சாய் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ளவதாக கடற் தொழிலாளர்களுக்குத் தெரிவித்தார்.
Powered by Blogger.