அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

இதில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்க வேண்டும் எனவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே மேற்கண்ட விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) தமது டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.