தமிழக எல்லையை கடந்தது கஜா புயல்!

தமிழக கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் நுழைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நேற்று தமிழகத்தை நெருங்கிய நிலையில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இன்று காலை 9.30 மணியளவில் தஞ்சாவூர் அதிராம்பட்டினம் அருகே முழுமையாக கரையை கடந்தது. தமிழக உள்மாவட்டங்கள் வழியாக கேரளா சென்றது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.  
Powered by Blogger.