மட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாபெரும் புத்தக கண்காட்சியொன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்கள் பற்றிய நூல்கள், இந்திய எழுத்தாளர்களின் நூல்கள், பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூல்கள், ஆய்வாளர்களுக்கான நூல்கள், ஆன்மீகம் தொடர்பான நூல்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான நூல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்கின்றது என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வந்த தேசிய வாசிப்பு மாததிற்கு இணையாக இம்மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை, பூபாலசிங்கம் புத்தக நிலையத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றது.
குறித்த கண்காட்சி நிலையம் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையில் திறந்திருக்கும் எனவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.