"சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்" - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அதிபர் டொனால்டு ட்ரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் செய்தியாளர், வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டாக்கும், ட்ரம்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அகதிகள் சட்டம், அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜிம் அகோஸ்ட்டா கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் அவரை திட்டி தீர்த்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிவுற்ற பின்னர், செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டா வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் போது பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக காரணம் சொல்லப்பட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அனுமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கு வாஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிஎன்என் செய்தியாளரின் நுழைவு சீட்டை உடனடியாக திரும்பி அளிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.