இடதுசாரிகளே! ஒன்றிணைந்து வேலை செய்வோம்! – குமார் குணரத்னம்

உண்மையான ஜனநாயகத்தை எதிர்ப்பார்க்கும், பொருளாதார சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்கும், இனவாதத்தை தோற்கடிக்க எதிர்ப்பார்க்கும்
அனைத்து இடதுசாரிய கட்சிகளுடனும், முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து உண்மையான மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்ப தாம் தயாரென முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

“அதிகாரப் போட்டியை தோற்கடிப்போம் – மக்கள் போராட்டத்திற்கு உயிரூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் 15ம் திகதி கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நடைபெற்ற பகிரங்க கருத்தரங்கில் உரையாற்றிய முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்புச் செயலாளர் குமார் குணரத்னம் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயத்தை பெற்றுத் தருவார்களென எதிர்ப்பார்த்த தலைவர்களும் நிறுவனங்களும் சரிந்து வீழ்ந்து மக்களின் நம்பிக்கையை தோற்கடித்துள்ள நிலையில் உண்மையான ஜனநாயகத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் நோக்கமாகக் கொண்ட சகல சக்திகளையும உடனடியாக ஒண்றிணையுமாறு தாம் அழைப்பு விடுப்பதாக முசோ.கட்சியின் அமைப்புச் செயலாளர் மேலும் கூறினார்.

அனறைய கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்,

ஒரு சந்தரப்பத்தில் யுத்தத்திற்கு தேவையான தலைவராகவும், ஜே. ஆரினாலும், சந்திரிக்காவினாலும் செய்ய முடியாதவற்றை செய்யும் தலைவராகவும்,  தொழிலாளர்களின் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை அடக்கி ஏகாதிபத்திய நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும் தலைவராகவும் ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டார். நாட்டில் இனவாத அதிகார நோக்கங்களுக்கான கருத்தியலை நிர்மாணிப்பவர்கள்  , மீசை வைத்த, ஆளுமை கொண்ட மேடைக்கு ஓடிவரும், எழுபது வயதைக் கடந்தாலும் துடிதுடிப்பான தலைவராகவே அவரை தூக்கிப் பிடித்தனர்.

மைத்திரிபாலவைப் பற்றி அவரது மகள் ஒரு நூல் எழுதினார். “ ஜனாதிபதி தந்தை” என்ற பெயரில். அவரிடமுள்ள வித்தியாசமான பண்புகள், மனிதப் பண்புகள். சகிக்கும் குணம், எளிமை போன்றவற்றை அந்நூலில் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தியலை உருவாக்கும் விதம் குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவரை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது நல்லாட்சி, ஜனநாயகம், சமத்துவம் பெற்றுத்தருவார் நல்லிணக்கத்தை கொண்டு வந்து இனவாதத்தை தோற்கடிப்பார்  என்றுதான் மைத்திரபால் சித்தரிக்கப்பட்டார். அப்படி காட்டப்பட்ட மைத்திரிபால இப்போது என்ன செய்கிறார்?

அப்பட்டமான பிற்போக்குத்தனத்தின் அடையாளமாகவும், எமது வரலாற்றின் சிறந்த பண்புகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நற்பண்புகள் நிறைந்த ஒருவரைப் போன்றே அன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் உரையாற்றினார். அவரது மகள் சதுரிகா எழுதிய நூலில் காணப்படும் ஜனநாயகவாதி, நல்லாட்சியை கொண்டுவருவர் என சித்தரிக்கப்பட்டிருந்த பாத்திரத்தை நாங்கள் காணவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுடன்  பாதைகளை மறித்துக் கொண்டு அவர் நடத்திய உரையை கேட்டபோது ஆசியான் சமூகத்திற்கும் அப்பால் சென்ற உறவும் சிந்தனையும் கொண்ட ஒருவரைக் கண்டோம்.

மும்பு எமது சமூகத்தில் இருந்தார்கள் விதானைமாரை பிரபுத்துவ எஜமானர்களை கண்டதும் பணிந்து ஒதுங்கும் பண்பு கொண்ட கிராமப்புற மக்கள்.. அப்படியானவர்கள் எஜமானுக்கு விஸ்வாசத்தை காட்டுவதற்காக பல்வேறு காரியங்களை செய்வார்கள். எஜமானின் கை கால்ளை அழுத்திவிடுவார்கள். பகையாளியை எஜமான் திட்டுவதை விட அதிகமாக திட்டுவார்கள். நாம் இந்த நிலையை ஏற்றுக் கொள்வதில்லை. மாற்ற வேண்டிய ஒன்று. அரசனை விட சார்ப்பைக் காட்டும் ஒரு கதா பாத்திரத்தை அன்று நாங்கள் கண்டோம்.

எனவே, அதிகார மாற்றத்தின்  நோக்கத்தோடு செயற்பட்ட ஜனாதிபதியின் நடத்தையை நாம் கண்டோம். ஆகவே 2015ன் வானவில் புரட்சியின்போது இருந்த மைத்திரிபால இப்போது இப்படித்தான் இருக்கிறார். நல்லாட்சியும், ஜனநாயகமும் கொண்டுவருவதாகக் கூறிய ஜனாதிபதி இப்போது இப்படித்தான் நடந்தகொள்கிறார். ஆகவே, ஜனநாயகம் சம்பந்தமாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் பல்வேறு முன்னணிகளுடன் பல்வேறு நபர்களுடனும் கட்சிகளுடனும் அணிவகுக்கும் அன்பிற்குறிய நண்பர்களே, நாம் இந்த ஏமாற்றுக்களில் சிக்க வேண்டியதில்லை. இது தனி நபர் பாத்திரங்களின், அரசியல் கட்சிகளின் பிரச்சினையல்ல. இது இந்த முறையின் பிரச்சினை. இதைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அடிக்கடி சொன்னாலும் இந்த சம்பவங்களின் ஊடாக அரசியல் விஞ்ஞான பாடத்தை நன்றாக கற்றுக்கொள்ள முடியும். முன்பு நாங்கள் 17ல் 20ல் கற்றுக் கொண்ட பாடங்களை இப்போது மூன்றரை வருடங்களில் கற்றுக் கொள்ள முடியும்.

தனது அதிகாரம் சம்பந்தமான பாதையை அமைத்துக் கொள்ளவே ஜனாதிபதி இப்படி நடந்துக் கொள்கிறார். எதிர் கட்சியில் இருப்பதை விட விரைவாக அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கம் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் உண்டு. இப்போதே பொதுத் தேர்தலுக்கு செல்வது நன்மைபயக்காது என்பது ரணில் விக்ரமசிங்க உட்பட  ஐக்கிய  தேசியக்கட்சிக்குத் நன்றாகத் தெரியும். இந்த ஒவ்வொருவரினதும் அதிகார நோக்கத்தைத்தான்  நாட்டில் தோன்றியுள்ள குழப்ப நிலை காட்டுகிறது.

எனவே இந்த தலைவர்களின் அரசியல் அதிகாரம் மக்களுக்கு எந்த நன்மையும் பெற்றுத்தரப் போவதில்லை. இந்நிலையில் மக்கள் அமைப்பாக வேண்டும். ஜனநாயகத்தை உண்மையாகவே பெற்றுத்தரக் கூடிய அமைப்பை உருவாக்க ஒன்றிணைவோம். வாக்குகளை சேகரிப்பதற்கல்ல, உண்மையான இடதுசாரி அதிகாரத்திற்காக ஒன்றிணையுமாறு அன்பிற்குறிய இடதுசாரி தோழர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்”.
Powered by Blogger.