மட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் திறந்து வைக்கப்பட்டன.
யு.எஸ்.எயிட் நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் பாம் பவுண்டேசன் இக்குளங்களை அமைத்துள்ளது.
கோடை காலங்களில் பெரும் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் பகுதியான சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி பகுதியில் மழை காலங்களில் நீரை சேமித்து பயிர்ச் செய்கை, விவசாயம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தும் வகையில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த குளங்களை  அமைக்கும் பணிகளுக்காக சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாம் பவுண்டேசன் தெரிவித்துள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை, பாம் பவுண்டேசன் பணிப்பாளர் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி பாம் பவுண்டேசன் பணிப்பாளர் சுனில் தம்பேபொல ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.