"அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை" புதுக்கோட்டை மக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் கடும் சேதம் விளைவித்துள்ளது. மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தண்ணீர், மின்சாரம் இன்றி தவித்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "மரங்கள், வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பிழைக்க வழியின்றி தவிக்கிறோம். அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. 20 ஆண்டுகள் பின் செல்லும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை புரட்டி போட்ட கஜா புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்னர். வத்தலக்குண்டு பகுதியில் கஜா புயல் தாக்கியத்தில் கணவாய்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட் 5 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்தன வீருவீடு பகுதியில் நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட முருகை மரங்கள் வேறோடு சாய்துள்ளன. அதே போல் கீழத்தெப்பத்துபட்டியில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்ட அவரை கொடி பந்தல் பலமான காற்றினால் தூக்கி வீசப்பட்டு மண்ணில் விழுந்தன.

திடீர் புயலால் இப்பகுதி விவசாயிகள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதனால் பல இலட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் சம்பவம் நடந்து ஒரு நாள் ஆகியும் எந்த ஒரு அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ தங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவோ நிவாரணம் வழங்கவோ முன்வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கண்துடைப்பிற்கு மழை நிவாரண நிதி வழங்காமல் புயல் நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.